வீட்டுப் பராமரிப்புப் பணிகள்

முன் அலுவலகத் திணைக்களத்தினால் ஒரு விருந்தினரை வரவேற்கும் விதம் பணியாளர்கள் எவ்வளவு விருந்தோம்பலுடன் காணப்படுகின்றனர் என்பதைக் குறிக்கிறது என்றால், வீட்டுப் பராமரிப்புத் திணைக்களத்தின் பணியானது ஹோட்டலின் மற்ற பகுதிகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. ஒரு ஹோட்டலில் உள்ள வீட்டு பராமரிப்புத் திணைக்களமானது தூய்மை, பராமரிப்பு மற்றும் சொத்தின் அழகியல் பராமரிப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பாகும். விருந்தினர்கள் களங்கமற்ற சொத்துக்குள் செல்ல விரும்புவதைப் போலவே, அவர்கள் வசதியான, சுத்தமான மற்றும் சௌகரியமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு அறைக்கு வரவேற்கப்படுவதை விரும்புகிறார்கள். இந்தத் திணைக்களத்தின் நோக்கமாவது ‘வீட்டிற்கு வெளியே வீடு’ போன்ற உணர்வை வழங்குவதாகும்.

இந்தத் திணைக்களத்தினுள் பல வேலை வகுதிகள் உள்ளன, நீங்கள் விருந்தினராக தங்கியிருந்த காலத்தில் அவற்றில் பலவற்றை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். ஹோட்டலில் அறைகளின் எண்ணிக்கை அதிகரிக்குமளவிற்கு இந்தத் திணைக்களத்தின் அளவும் அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

 

1. வேலைப் பாத்திரங்கள்

ஆரம்ப மட்டம்:

பயிலுநர்: இந்தத் திணைக்கள பணியாளர்கள் இடங்களைக் கிருமி நீக்கம் செய்ய மற்றும் சுத்தம் செய்யப் பயன்படும் ஏராளமான இரசாயனங்கள், அத்துடன் தரை மெருககேற்றும் இயந்திரம் போன்ற இயந்திரங்களையும் கையாளுகின்றனர். ஒரு புதியவருக்கு இவை அனைத்தையும் ஒரே நாளில் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். ஆகையால், நீங்கள் குறைந்தது மூன்று மாதங்களாவது பயிற்சியில் இருப்பீர்கள்.

களஞ்சிய உதவியாளர்: இந்த நபர் களஞ்சிய அல்லது தள மேற்பார்வையாளருக்கு அறிக்கை செய்கிறார். சலவைத்தூள் மற்றும் குளியலறை வசதிகள் போன்ற துப்புரவு உபகரணங்களின் பட்டியலை வைத்திருப்பது மற்றும் புதிய பொருட்களை வாங்குவதற்கான கோரிக்கையை வைப்பது அவர்களின் பிரதான கடமையாகும்.

பொதுப் பகுதி உதவியாளர்கள்: ஹோட்டலின் பொதுப் பகுதிகள் விருந்தினர்கள் அடிக்கடி வரும் இடங்களாகும். இந்த நபர் வரவேற்பு, பகுமுகக்கூடம், தாழ்வாரங்கள், மின்னுயர்த்திகள், வாகன நிறுத்துமிடங்கள் சுத்தமாகவும், புதிய வாசனையுடனும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் பொதுப் பகுதி மேற்பார்வையாளரிடம் அறிக்கையிட வேண்டும்.

இரவு நேர வேலை உதவியாளர்கள்: இந்த நபர் இரவு நேரங்களில் வீட்டுக்காவல் கடமைகளைச் செய்வார் மற்றும் ஹோட்டல் பாதுகாப்பு சிக்கல்களை சரிசெய்வதற்கு இரவு மேற்பார்வையாளரிற்கு உதவுவார்.

சீருடை / லினன் அறை உதவியாளர்கள்: இந்த நபர் உலர்ந்த துணியை அதன் வகைக்கு ஏற்ப பிரித்து சலவைக்கு அனுப்புகிறார். கை துடைக்கும் துண்டுகள், படுக்கை விரிப்புக்கள், தலையணைகள் போன்ற லினன் பொருட்கள் பற்றிய இருப்புப் பதிவுகளைப் பராமரிக்கின்றார். இந்த நபர் சீருடைகளையும் சேகரித்து அடுத்த பயன்பாட்டிற்காகப் பராமரிக்கிறார்.

விருந்தினர் அறை உதவியாளர்கள்: தள மேற்பார்வையாளருக்கு அறிக்கையிடுகின்றார். இவர்கள் விருந்தினர் அறைகள், குளியலறைகள் மற்றும் தாழ்வாரங்களைச் சுத்திகரித்தல், விருந்தினர் அறை விநியோகங்களை மீள்நிரப்புதல், கட்டிலைச் சீர்செய்தல் மற்றும் ஹோட்டலின் சுத்திகரிப்புப் பொருள் கொண்டு செல்லும் தள்ளுவண்டியை விநியோகங்களால் மீள்நிரப்புதல் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர்.

மேற்பார்வை மட்டம்

களஞ்சியப் பொறுப்பாளர்: களஞ்சியத்தில் நன்றாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பதை இந்த நபர் தெரிந்து கொள்ள வேண்டும். களஞ்சியத்தில் தேவையான அனைத்துப் பொருட்களும் இருப்பதை உறுதிசெய்ய அவர் களஞ்சிய உதவியாளருடன் சரிபார்ப்பார்.

பொது பகுதி மேற்பார்வையாளர்: இந்த நபர் சொத்தின் பராமரிப்பிற்கு உதவ போதுமான பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவர் கோப்பிக் கடை, உடற் பயிற்சிக்கூடம் , நீச்சல் குளம், உணவகம், விருந்து மண்டபம், பகுமுகக் கூடம், மின்னுயர்த்தி மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பொதுப் பகுதிகளை ஆய்வு செய்து அவை நன்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்வார்.

இரவு நேர மேற்பார்வையாளர்: இரவு நேரப் பணியைப் பொறுப்பெடுத்துக்கொள்கிறார், விருந்தினர்களுக்குத் தண்ணீர் மற்றும் பிற வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவர் இரவில் போதுமான செயற்பாட்டு பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்வதுடன் ஹோட்டலின் ஒட்டுமொத்த தூய்மையை மேற்பார்வையிடுவார்.
சீருடை / லினன் அறை மேற்பார்வையாளர்: அவர் லினனை ஆய்வு செய்து, சலவை அல்லது அழுத்துவதற்காக அனுப்பி ஒரு பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும். சுத்தமான, அழுத்தப்பட்ட சீருடைகளை வழங்க வேண்டும், கொள்வனவைப் பரிந்துரைப்பதுடன் சீருடையின் நிலையை கண்காணிக்க வேண்டும்.

மேசை மேற்பார்வையாளர்: இந்த நபர் வீட்டு பராமரிப்புத் திணைக்களத்தின் காணாமற்போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட அலகுக்கு பொறுப்பானவர். ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டால் அல்லது உரிமையாளர் ஹோட்டலைத் தொடர்பு கொண்டால், அவர் ஏனைய மேற்பார்வையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடன் ஒருங்கிணைப்பார்.

தள மேற்பார்வையாளர்: அறை உதவியாளர்களுக்கு சாவிகளை வழங்குதல், தள நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், தயார்நிலைக்கான அறைகளை ஆய்வு செய்தல் மற்றும் முன் அலுவலகத்திற்கு அறையின் நிலையை தெரிவித்தல் ஆகியவற்றை மேற்கொள்வார். மிக முக்கியமான நபர்களின் வருகையின் போது உதவிசெய்துஅவர்கள் தங்குவதற்கு வசதிசெய்து கொடுப்பார்.

நிறைவேற்று மட்டம்:

உதவி வீட்டுப்பராமரிப்பாளர்: இது ஒரு நிறைவேற்று அல்லது முகாமைத்துவ மட்டப் பதவியாகும், ஏனெனில் இதற்கு திறமையான தகவல் தொடர்பு மற்றும் நிறுவனரீதியான திறன்கள் தேவைப்படும் அதேவேளை மேற்பார்வைக் கடமைகளுடன் வருகிறது. இந்த நபர் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு, பணித்தாள்கள் மற்றும் அட்டவணைகளைக் கவனிப்பார், ஹோட்டல் அதன் உள்ளக பணியாளர்களுக்கான நிகழ்வுகளை ஒழுங்கமைக்க உதவுவார், நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதுடன் தேவைப்படும்போது விருந்தினர்களுடன் பேசுவார்.

நிறைவேற்று வீட்டுப்பராமரிப்பாளர்: இந்த நிறைவேற்று முகாமையாளர் திணைக்களத்தின் தலைவராவார். அவர் ஒட்டுமொத்த தூய்மை, அழகியல், புதியவர்களுக்கு பயிற்சி அளித்தல், சுத்தம் மற்றும் அலங்கரிப்பதற்கான நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை நிறுவுதல் ஆகியற்றை உறுதிப்படுத்துதல், வழக்கமான சரக்கிருப்பினைக் கண்காணித்தல், பணியாளர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்தல், பொது முகாமையாளருக்கு வரவுசெலவுத் திட்டத்திற்கான மதிப்பீட்டை வழங்குதல் ஆகியவற்றை மேற்காள்வார்.

 

2. தொழில் முன்னேற்றம்

வீட்டு பராமரிப்பு என்பது பல பணிகள் பௌதீகரீதியாகத் தேவைப்படும் பணியாகும். நீங்கள் உயிர்ப்பானவர் என்பதையும் இந்தத் துறையில் நிலைத்திருக்கக் கூடிய மனப்பான்மையைக் கொண்டவர் வேண்டும் என்பதையும் முதலில் நிரூபிக்க வேண்டும். ஒரு சில படுக்கைகளைச் சரிசெய்தவுடன் நீங்கள் களைப்படைந்தால், நீங்கள் இந்த திணைக்களத்திற்குரியவராக இருக்க முடியாது.

2.1 பதவியுயர்வுகள்

நீங்கள் முயற்சி செய்ய தயாராக இருந்தால், தொழில் முன்னேற்றம் மிகவும் எளிதானது. மேற்பார்வை மட்டப் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு நீங்கள் குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆரம்ப மட்டத்தில் பணியாற்ற வேண்டியிருக்கலாம். ஒரு மேற்பார்வை மட்டத்தில், உங்களுக்கு கீழ் பணிபுரியும் பல பணியாளர்களுடன் அதிக பணிகள் மற்றும் பொறுப்புகள் உங்களுக்கு இருக்கும். இந்த மட்டத்தில் நீங்கள் 1 முதல் 3 ஆண்டுகள் வரை வேலை செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு உதவியாளரின் நிலையை அடைந்ததும், முன்னேறுவது எளிதாக இருக்கும். முகாமைத்துவப் பதவியொன்று வெற்றிடமாகிவிட்டால், நீங்கள் கருத்திற்கொள்ளப்படுவீர்கள்.

 

3. அறிவும் திறன்களும்

3.1 அறிவு

நீங்கள் விருந்தோம்பல் துறையில் பணிபுரிந்தால் ஆங்கிலம் பேசுவது இன்னும் அவசியமாக இருக்கும்போது, உங்களுக்கு போதுமான நம்பிக்கை இல்லை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் வீட்டு பராமரிப்புத் திணைக்களத்தினுள் ஆரம்ப மட்டத்திற்கு முயற்சி செய்யலாம். எவ்வாறாயினும், வேறு எந்தத் திணைக்களத்தையும் போலவே, நீங்கள் தகுதிபெற உங்கள் பாடசாலைப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஆரம்ப மட்டம்

மேற்பார்வை மட்டம்

நிறைவேற்று மட்டம்

 

3.2 திறன்கள்

4. பணியமர்த்தல் செய்முறை

முன் அலுவலகத் திணைக்களத்திலுள்ள ஒரு பதவியைப் போலன்றி, ஆரம்ப மட்டப் பதவிக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் ஒரு குழுவால் நேர்காணப்பட மாட்டீர்கள். மனிதவள முகாமையாளர் உங்கள் விண்ணப்பத்தைக் கவனித்து, உங்கள் முன் அனுபவம் அல்லது கல்வித் தகைமைகள் குறித்து கேள்விகளைக் கேட்பார். நீங்கள் ஒரு நிறைவேற்றுப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், நீங்கள் பணியாற்றிய நிறுவனங்கள், நீங்கள் கற்றுக்கொண்ட திறன்கள் மற்றும் நீங்கள் அடைந்த மைல்கற்கள் ஆகியவற்றில் உங்கள் விண்ணப்பத்தில் (மற்றும் வாய்மொழியாக கூட) விவரிக்க வேண்டும். உங்களுக்கு சான்றிதழ்கள் அல்லது பாராட்டுக்கள் வழங்கப்பட்டிருந்தால், அவற்றையும் உங்கள் விண்ணப்பத்தில் விவரிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

5. சம்பள அளவு

ஏனைய அனைத்து ஆரம்ப மட்டங்களையும் போலவே, ஆரம்ப சம்பளம் அடிப்படைச் சம்பளமாகும். இது பௌதீக ரீதியாக தேவைப்படும் பணி என்பதை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் முன்னேறுவதற்குக் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு முன்பே நீங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆரம்ப மட்டத்தில் நீங்கள் ரூபா .15,000 முதல் ரூபா .20,000 வரை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். சேவை கட்டணத்தில் ஒரு சதவீதத்தையும் நீங்கள் பெறலாம், ஆனால் அது ஹோட்டல் வகை, மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள், அளவு போன்றவற்றைப் பொறுத்ததாகும்.

ஒரு மேற்பார்வை நிலையில் நீங்கள் ரூ .20,000 முதல் ரூ .30,000 வரை அடிப்படை சம்பளத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வாய்ப்புள்ளது. சேவை கட்டணங்களுடன் ஹோட்டல் வழங்கும் பிற கொடுப்பனவுகளுடன் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

நிர்வாக மட்டத்தில், நீங்கள் ரூபா.30,000 வரை சம்பாதிப்பீர்கள். ஹோட்டல் மற்றும் உங்கள் பொறுப்புகளைப் பொறுத்து இது மீண்டும் மாறுபடும்.

Women in Tourism

Let her learn, let her explore, let her see the world

Sri Lanka's tourism industry offers a number of career opportunities for women. Here's a glimpse into some of them.

Watch Video