சுற்றுலா முகாமையாளர்

ஒரு சுற்றுலா முகாமையாளரின் பணி விவரம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும், ஆனால் பொதுவாக இந்த நபரின் முக்கிய கடமை தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கான நீண்ட தூர பயணம் அல்லது பயணங்களை ஒழுங்கமைத்தல், திட்டமிடுதல் மற்றும் எளிதாக்குதல் ஆகும். சுற்றுலா முகாமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான விடுமுறைகளை உருவாக்குகிறார்கள், இது ஒரு தனித்துவமான அனுபவத்தை உண்மையான மற்றும் மறக்கமுடியாததாக வழங்குவதை உறுதி செய்கிறது. ஒரு சுற்றுலா முகாமையாளரை, முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறும், இட முகாமையாளர்களைக் கையாளுமாறும், வாடிக்கையாளர் பொழுதுபோக்குக்காக பயணிக்கிறாரென்றால் பயணச்சீட்டு முகவர்களைக் கையாளுமாறும் கேட்கலாம்.

வேலைப் பாத்திரங்கள்

நுழைவு மட்டம்
கனிஷ்ட நிறைவேற்று அலுவலர்: குறிப்பிட்ட பணி விவரம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும், ஆனால் அவர்களின் பிரதான கடமை நிறைவேற்று முகாமையாளர், பிரயாண முகாமையாளர், அல்லது பிரயாண ஆலோசகருக்கு உதவி செய்வதாகும். இந்தப் பதவியானது, பணியில் சில வருட அனுபவத்தைத் தொடர்ந்து ஒரு சிரேஷ்ட பதவியை அடைவதற்கான ஒரு ‘படிக்கல்லாகப்’ பார்க்கப்படுகிறது.

சிரேஷ்ட மட்டம்
சுற்றுலா முகாமையாளர் / பிரயாண ஆலோசகர் / நிறைவேற்று முகாமையாளர்: இந்தப் பதவியில் உள்ள நபர் பயணத்திட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் பயணியின் சார்பாக சுற்றுப்பயண திட்டங்களை உருவாக்குவது தொடர்பான அனைத்துப் பணிகளையும் மேற்பார்வையிடுவார். அவர்களின் கீழ் ஒரு குழு செயல்படும்.

தொழில் முன்னேற்றம்

ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் துறையில் உள்ள ஏனைய திணைக்களங்களைப் போலல்லாமல், ஒரு கனிஷ்ட நிறைவேற்று அலுவலராகவிருந்து ஒரு பிரயாண முகாமையாளராவதற்கு போதியளவு வேலை அனுபவம், பரிந்துரைகள் மற்றும் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கான வெளிப்பாடு ஆகியவற்றைக் கொண்டு முன்னேறுவது மிகவும் எளிதானது. அடிப்படையில், முன்பதிவுகளை மாற்றுவதை உறுதி செய்வதற்கும் நிறுவனத்திற்கு வருவாயை ஈட்டுவதற்கும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வு முக்கியம். நீங்கள் சிறப்பாக செயல்பட்டால், கனிஷ்ட அலுவலராகப் பணிபுரிந்த முதல் ஆறு மாதங்களுக்குள் பதவி உயர்வு பெறலாம்.

அறிவும் திறன்களும்

பாடசாலை மற்றும் உங்கள் உயர்தரப் பரீட்சையை முடிப்பது கட்டாயமாகும். சான்றிதழ்கள் வடிவில் சுற்றுலாத் துறையில் உயர் கல்வித் தகுதிகள், டிப்ளோமாக்கள் முன்னேறுவதற்கான ஒரு அனுகூலமாகும். பெருநிறுவனத் துறையில் முன்னேறுவதற்கு உதவும், உயர் தேசிய டிப்ளோமாக்கள் அல்லது தேசிய தொழிற் தகைமைகளை (NVQ) வழங்கும் மூன்றாம்நிலை மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் உள்ளன.

திறன்கள்

பணியமர்த்தல் செயல்முறை

பிரயாண முகாமையாளர் அல்லது பிரயாண ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு மற்ற பதவித் தலைப்புகளைப் போலவே, உங்கள் விண்ணப்பம், உங்கள் கடந்தகாலப் பதிவுகள் மற்றும் பரிந்துரைகள் தேவைப்படும். கனிஷ்ட அல்லது சிரேஷ்ட பிரயாண முகாமையாளர் பதவிக்கு நீங்கள் பொருந்துகிறீர்களா என்பதைப் பார்க்க மனிதவள முகாமையாளரால் நீங்கள் நேர்காணல் செய்யப்படுவீர்கள்.

சம்பள அளவு

சம்பள அளவு ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுபடும். கனிஷ்ட நிறைவேற்று அலுவலரின் ஆரம்ப சம்பளம் சுமார் ரூபா. 30,000 முதல் ரூபா. 60,000 ஆக அல்லது பிரயாண முகாமையாளருக்கு அதற்கு அதிகமாகவிருக்கும்.