இயற்கையியலாளர்

விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மூலம் இயற்கை வாழ்விடத்தை பாதுகாத்தல், மீட்டமைத்தல், பராமரித்தல் மற்றும் காத்தல் ஆகியன இயற்கையியலாளரின் முதன்மைப் பொறுப்புகளாகும். இந்தத் தொழில்களுடன் தொடர்புடைய பொறுப்புகளில் கற்பித்தல், பொதுச் சொற்பொழிவுகள், எழுதுதல், விஞ்ஞானரீதியிலான மற்றும் சுற்றுச்சூழல் செயல்விளக்கங்களை வழங்குதல் மற்றும் மக்கள் தொடர்புகள் மற்றும் நிர்வாக பணிகளை கையாளுதல் ஆகியன அடங்கும். இயற்கையியலாளர்கள் தனியார் இயற்கை மையங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் காடுகள், வனவிலங்கு அருங்காட்சியகங்கள், சுயாதீன இலாப நோக்கற்ற பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புச் சங்கங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் பணியாற்றலாம்.

1. வேலைப் பாத்திரங்கள்

ஆரம்ப மட்டம்

தன்னார்வ/பருவகாலப் பணியாளர்: நீங்கள் சுற்றுச்சூழலைப் பற்றி மிகவும் ஆழ்ந்த அக்கறை கொண்டவராகவும், இயற்கையியலாளராக ஒரு தொழிலைத் தேடுகிறவராகவும் இருந்தால், அதனைத் தொடங்குவதற்கு இது ஒரு நல்ல இடமாகும். நீங்கள் விடுமுறையில் இருக்கும்போது தன்னார்வத் தொண்டு செய்யலாம் அல்லது பூங்கா அல்லது நிறுவனத்திற்கு நீங்கள் மிகவும் தேவைப்படும்போது பருவகாலப் பணியாளராகலாம்.

மேற்பார்வை மட்டம்

இயற்கையியலாளர்: ஒரு இயற்கையியலாளர் என்பவர் சூழலின் சமநிலையைப் பராமரிக்க உதவுபவர். இந்த விலங்குகள் இந்த வாழ்விடங்களை எவ்வாறு தங்கள் இல்லங்களாக அமைத்துக் கொண்டுள்ளன என்பதைக் காண்பிப்பதன் மூலம் இயற்கை வாழ்விடங்களில் செழித்து வளரும் தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து இயற்கையியலாளர்கள் மக்களுக்கு அல்லது விருந்தினர்களுக்குக் கற்பிக்கிறார்கள். ஒரு பூங்கா இயற்கையியலாளர் பூங்காவின் தாவரங்கள் அல்லது விலங்கினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேநேரத்தில், பூங்காவை வருமானம் ஈட்டும் நோக்கத்துடன் ஊக்குவிப்பார். ஒரு ஹோட்டல் அல்லது சுற்றுலா விடுதியில், ஹோட்டலின் நேரடிச் சூழல் மற்றும் சுற்றியுள்ள இயற்கை சூழலைப் பற்றி விருந்தினர்களுக்குக் கற்பிப்பதே இயற்கையியலாளரின் பங்காகும்.

நிறைவேற்று மட்டம்

வளம்பேணல் பணிப்பாளர்: பாதீடு, ஊழியர்களின் பணி அட்டவணைகள், பூர்வீக வாழ்விட மறுசீரமைப்பு, கவர்ச்சியான மற்றும் ஆக்கிரமிப்பு இனங்கள் கட்டுப்பாடு, உட்கட்டமைப்பு பராமரிப்பு, விருந்தினர் பாதுகாப்பு மற்றும் பொது / தன்னார்வ தொடர்பு சம்பந்தமான அவரது குழுவின் நிர்வாகத்திற்கு வளம்பேணல் பணிப்பாளரே பொறுப்பாகவிருப்பார். இந்த நபர் முழுப் பேணல் திட்டத்தையும் மேற்பார்வை செய்வார்.

2. தொழில் முன்னேற்றம்

இந்த துறையில் பணியாற்ற நீங்கள் இந்த விடயத்தில் ஆர்வமாக இருக்க வேண்டும். இந்தத் துறையில் நுழையும் பலர் தொழில் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதில்லை, ஆனால் பாதுகாப்பிற்கு பங்களிப்புச் செய்வதிலும் சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறார்கள். எனவே, இது மிகவும் போட்டி நிறைந்த தொழிலாக இல்லாதிருப்பதால், உங்கள் சொந்த தொழில் முன்னேற்றத்தைத் திட்டமிடுவது உங்களுடைய கைகளிலுள்ளது.

3. அறிவும் திறன்களும்

3.1 அறிவு

நீங்கள் உயர்தரம் (விஞ்ஞானத் துறை) முடித்திருக்க வேண்டும், ஆனால் உங்களிடம் சாதாரண தரத் தகைமைகள் மட்டுமே இருந்தால், சுற்றுச்சூழல் விஞ்ஞானம் (விலங்கியல், தாவரவியல் போன்றன) தொடர்பான துறைகளில் டிப்ளோமா அல்லது உயர் தகைமையை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். ஆங்கிலத் தேர்ச்சியானது சரளமானது அவசியமானதாகும் ( ஏனைய வெளிநாட்டு மொழியொன்றில் உரையாடும் இயலுமை மேலதிக தமைமையாகக் கொள்ளப்படும்).

ஹோட்டலின் சூழலை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடுகளை உருவாக்குமாறும் (பறவைகளைப்; பார்வையிடல்> வண்ணத்துப்பூச்சி பார்வையிடல்> மூலிகைத் தோட்டங்கள் போன்றன) சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான சுற்றுலாத்துறை பற்றிய தகவல்களை அபிவிருத்தி செய்யுமாறும், சூழல் பாதுகாப்பு செயற்றிட்டங்களையும் வழிமுறைகளைப் (சூரிய சக்தி போன்றன) பயன்படுத்துவதற்கு நிறுவனத்தை ஊக்குவிக்குமாறும், விருந்தினர்களுடன் தொடர்புகொண்டு, சொத்துக்களால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புத் திட்டங்கள் (கழிவு-நீர் சுத்திகரிப்பு, மீள்சுழற்சிப் பொறிகள் போன்றன) குறித்து அவர்களுக்குக் கற்பிக்குமாறும் ஒரு இயற்கையியலாளரிடம் கேட்கப்படும்.

சில அனுபவங்கள் மற்றும் பயிற்சியுடன், ஒரு இயற்கையியலாளர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வழிகாட்டல் திட்டங்களை நடத்தலாம், அல்லது இந்தத் துறையில் ஒரு பயிற்சியாளர் அல்லது விரிவுரையாளராகவும் முடியும். இயற்கையியலாளர் நடத்தும் விழிப்புணர்வு அமர்வுகளுக்கு ஹோட்டல் பெரும்பாலும் அருகிலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை அழைக்கிறது. சுற்றுச்சூழல் பற்றிய ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்வதன் மூலமும், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் கட்டுரைகளை வெளியிடுவதன் மூலமும் இயற்கையியலாளர்கள் பங்களிப்புச் செய்கிறார்கள்.

3.2 திறன்கள்

4. சம்பள அளவு

ஒரு இயற்கையியலாளரின் சம்பள அளவு நிறுவனத்தின் வகை அல்லது சொத்தின் தன்மையினால் வேறுபடுகிறது. இந்த நபர் ஒரு தேசிய பூங்காவால் குறைந்த ஊதியத்திற்குப் பணியமர்த்தப்படலாம் அல்லது ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலால் அதிக ஊதியத்திற்குப் பணியமர்த்தப்படலாம், அதுபோன்று, ஒரு இயற்கையியலாளர் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என நிலையான கட்டணங்கள் இல்லை. அவர்களின் வருமானமானது ரூபா.30,000 முதல் ரூபா .50,000 வரை இருக்கலாம்.