ஆரோக்கியமும் ஆயுர்வேதமும்

ஆரோக்கிய சுற்றுலாத் துறை என்பது உலகளாவிய சுற்றுலாத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தங்கள் பயணங்களில் ஆரோக்கிய அனுபவங்களைச் சேர்ப்பதற்காகத் தேடும் விருந்தினர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கின்றது. ஆரோக்கியத்தில் ஆயுர்வேத சிகிச்சைகள் அல்லது ஸ்பா சிகிச்சைகள் மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உணவு அனுபவங்கள், யோகா, தியானம், ஆன்மீக புத்துணர்ச்சி மற்றும் பிற உடல்நலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் ஆகியன அடங்கும். குளோபல் வெல்னஸ் நிறுவனம் (Global Wellness Institute )ஆரோக்கிய சுற்றுலாத்துறையை ஆண்டுக்கு 6.5% வளர்ச்சி வீதம் கொண்ட 639 பில்லியன் டொலராக மதிப்பிடுகிறது.

இலங்கையில், ஆயுர்வேதத்துடனான தீவின் வரலாற்று தொடர்பு காரணமாக ஆரோக்கிய சுற்றுலா ஒரு புதிய அர்த்தத்தைப் பெறுகிறது. இலங்கைக்கு வரும் விருந்தினர்கள் ஆயுர்வேத சிகிச்சைகளை அனுபவிக்கவும், தொலைதூர இடங்களுக்குச் சென்று ஓய்வெடுக்கவும் ஆர்வமாக உள்ளனர்.

கொவிட் -19 நெருக்கடியிலிருந்து வெளிவரும் உலகளாவிய பயணத் துறையில் நம்பகமான குரலான டிராவல் வீக்லியின் கருத்துப்படி, அதிகமான பயணிகள் ஆரோக்கியத்துடன் கூடிய சிறப்பு அனுபவங்களை முன்னுரிமையாக நாடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

ஆரோக்கிய சுற்றுலாவில் இரண்டு வெவ்வேறு வகைகள் உள்ளன:

உள ஆரோக்கியம் என்பது ஒருவரின் உணர்ச்சி, அறிவுசார் மற்றும் ஆன்மீக நல்வாழ்வை மேம்படுத்துகிறது. உடல் ஆரோக்கிய சுற்றுலாவில் ஒரு ஸ்பா, சிகிச்சைகள், மசாஜ்கள், யோகா மற்றும் நச்சுத்தன்மை ஆகியவை அடங்கும். இலங்கையில், ஆரோக்கிய சுற்றுலா என்பது இவை இரண்டிதும் கலவையாகும், இதற்கு பாரம்பரிய ஆயுர்வேதம் சிறந்த உதாரணமாகும்.

வேலைப் பாத்திரங்கள்

ஆயுர்வேதப் பயிற்றுவிப்பாளர்: ஆயுர்வேதப் பயிற்றுவிப்பாளர் பொதுவாக ஆயுர்வேதத்தைப் படித்த மருத்துவராக இருப்பார். அவர் அனுபவம் மற்றும் அறிவை அதிகமாகக் கொண்டிருப்பதுடன், ஒரு நபரின் ஆரோக்கிய இலக்குகளில் ஆலோசனை கூறுவார்கள். அவர்கள் ஒரு ஆரோக்கிய நிறுவனத்திற்குத் தலைமை தாங்குபவர்களாகவும் இருக்கலாம்.

யோகா பயிற்றுவிப்பாளர்: யோகா பயிற்றுவிப்பாளரின் முக்கிய கடமை யோகா அமர்வுகளில் ஒரு குழுவை வழிநடத்துவதும், பல்வேறு நிலை யோகாக்கள் மூலம் அவர்களை வழிநடத்தும் பாடத்திட்டங்களை வகுப்பதும் ஆகும். இந்த நபர் நிர்வாகப் பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கலாம் மற்றும் தனிப்பட்ட வகுப்புகளுக்கு கற்பிக்கக்கூடும்.

மசாஜ் சிகிச்சையாளர்: ஒரு மசாஜ் சிகிச்சையாளர் வாடிக்கையாளர்களுக்கு மசாஜ் சிகிச்சை செய்கிறார். மன அழுத்தம், வலி மற்றும் பிற வியாதிகளைப் போக்க அவர்கள் அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் பாரம்பரிய நுட்பங்களைப் பயன்படுத்தலாம். ஆயுர்வேத மசாஜ் சிகிச்சையாளர்கள் ஆயுர்வேத கலவைகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அவர்களின் நோக்கம் ஒன்றேயாகும். பெரும்பாலான ஹோட்டல்களும் உல்லாசப் பயண விடுதிகளும் அவற்றின் சொந்த ஸ்பாக்களைக் கொண்டுள்ளதுடன் மசாஜ் சிகிச்சையாளர்களையும் பயன்படுத்துகின்றன.

தியான ஆசிரியர்: பதவித் தலைப்பு ஆசிரியர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், ஒரு தியான ஆசிரியர் பொதுவாக ஒரு நபரை, தியான நடைமுறைகள் மூலம் மன தெளிவு, ஸ்திரத்தன்மை, சமாதான உணர்வு மற்றும் அமைதியை அடைய வழிகாட்டும் நபராவார்.

பைலேட்ஸ் பயிற்றுவிப்பாளர்: யோகா பயிற்றுவிப்பாளரைப் போலவே, பைலேட்ஸ் பயிற்றுவிப்பாளரும் உடற்பயிற்சி, கவனத்துடனான தியானம், நீட்சி மற்றும் மிக முக்கியமாக பைலேட்ஸ் உடற்பயிற்சி திட்டத்தில் சிறப்பு வகுப்புகளை வழிநடத்துவார். அவர்களின் பணியின் ஒரு பகுதியாக அவர்கள் நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உடற்தகுதிப் பயிற்றுவிப்பாளர்: உடற்தகுதிப் பயிற்றுவிப்பாளர் தனிப்பட்ட பயிற்றுவிப்பாளர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த நபர்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் உடற்பயிற்சி அல்லது எடை இழப்பு இலக்குகளை அடைய உதவுவர். அவர்கள் வழக்கமாக சான்றிதழ் பெற்றவர்களாகவும், மிகவும் திறமையானவர்களாகவும் இருப்பதுடன் ஹோட்டல்களில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உல்லாசப் பயண விடுதி போன்ற பிற நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.

ஊட்டச்சத்து நிபுணர்: ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் ஒரு பெரிய பகுதி ஆரோக்கியமாக இருப்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆரோக்கியமாக இருக்க ஒருவர் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஒரு நபரின் உடற்பயிற்சி இலக்குகளுக்கு ஏற்ற உணவுகளைத் தேர்ந்தெடுப்பதில் வழிகாட்டுவார். சில நேரங்களில் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது ஊட்டச்சத்து தொடர்பான நோய்களைக் கண்டறியவும், உணவுத் திட்டங்கள் போன்ற பொருத்தமான தீர்வுகளை வழங்கவும் முடியும். ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட உல்லாசப் பயண விடுதி மற்றும் ஸ்பாக்கள் ஊட்டச்சத்து நிபுணர்களை, தங்கள் வாடிக்கையாளர்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களில் உதவுவதற்காகப் பணிக்கமர்த்துகின்றன.

தொழில் முன்னேற்றம்

ஏனைய திணைக்களங்கள் மற்றும் தொழில்களைப் போலல்லாமல், ஆரோக்கிய சுற்றுலாத் துறையில் வேலை பாத்திரங்கள் ஒன்றோடொன்று மாற்றமுடியாதவை. இன்று ஒரு ஆயுர்வேத மசாஜ் சிகிச்சையாளராகவும், அடுத்த வாரம் ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும் இருக்க முடியாது. இந்த வேலைப் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட திறன்கள், அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. உடற்தகுதி பயிற்சியாளர்கள் மற்றும் ஆயுர்வேத பயிற்சியாளர்கள் போன்ற பதவிகளுக்கு தொழில்முறை அமைப்புகளில் சான்றிதழ்கள் மற்றும் உறுப்பான்மை தேவை.

பதவி உயர்வுகள்

முன்பு குறிப்பிட்டபடி, ஒருவர் ஒரு பதவித் தலைப்பிலிருந்து இன்னொரு இடத்திற்கு முன்னேறுவதில்லை. எனவே, ஒரு பதவி உயர்வு என்பது ஒரு பிரதி அல்லது உதவிப் பதவியில் இருந்து பிரதான பதவி வரை இருக்கும். உதாரணமாக, உதவி மசாஜ் சிகிச்சையாளர் முதல் பிரதான சிகிச்சையாளர் வரை. இது போன்ற ஒரு பதவி உயர்வுக்குத் தனிநபர் ஒரு தொகுதிப் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அறிவும் திறன்களும்

அறிவு

ஆயுர்வேதப் பயிற்றுவிப்பாளர்: ஒரு எம்.பி.பி.எஸ் போலல்லாமல், நீங்கள் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையின் இளங்கலைப் பட்டத்தைக் குறிக்கும் BAMS ஐப் பின்பற்ற வேண்டும். இது பொதுவாக ஐந்து ஆண்டு மற்றும் ஆறு மாத திட்டமாகும். மருத்துவத்தைப் போலவே, இது ஒரு கடுமையான கற்கைநெறியாகும். இலங்கை ஆயுர்வேத மருத்துவத்திற்கான ஒரு தாய்வீடாக இருப்பதால், இந்தத் துறையில் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏராளமான கற்கைநெறிகளுக்கான தெரிவுகள் உள்ளன.

திறன்கள்:

யோகா பயிற்றுவிப்பாளர்: யோகா பயிற்றுவிப்பாளராக நீங்கள் தொழில் குறித்து தீவிரமாக இருந்தால், நீங்கள் ஒரு பயிற்சித் திட்டத்தை முடிக்க வேண்டும். உடற்பயிற்சி அல்லது சுகாதார அறிவியலில் பட்டம் உங்களுக்கு உதவும், ஆனால் இது பொருத்தமான பதிலீடு அல்ல. யோகாவில் ஒரு சிறப்பு பயிற்சி திட்டம் அல்லது சான்றிதழ் கட்டாயமாகும். உலகளவிலான யோகா கூட்டணியால் (www.yogaalliance.org). உருவாக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 200 மணிநேர தெரிவு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரியர் பயிற்சி பாதையாகும். இதன் பட்டதாரிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட யோகா ஆசிரியராக (RYT) முடியும்.

திறன்கள்:

மசாஜ் சிகிச்சையாளர்: மசாஜ் சிகிச்சையாளராக மாற நீங்கள் கருத்தியல் கற்கை மற்றும் செயற்பாட்டுரீதியான கற்கை இரண்டையும் பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் ஒரு மசாஜ் சிகிச்சை நிகழ்ச்சியைப் முடிக்க வேண்டும், இது உங்களுக்கு மருத்துவ சொற்கள், மசாஜ் நெறிமுறைகள், உடலியல் மற்றும் உடற்கூறியல் ஆகியவற்றைக் கற்பிக்கும். அதன்பிறகு, மணிநேரங்களின் எண்ணிக்கையை பூர்த்திசெய்ய நீங்கள் செயற்பாட்டுரீதியான கற்கைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். சான்றிதழ் பெற நீங்கள் உரிமத் தேர்வைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் உறுப்பினராகக்கூடிய பல சர்வதேச மற்றும் தொழில்முறை சங்கங்கள் உள்ளன.

திறன்கள்:

தியான ஆசிரியர்: உலகம் முழுவதும் அதிக பயிற்சி பெற்ற மற்றும் அங்கீகாரம் பெற்ற தியான ஆசிரியர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் ஒரு கோரிக்கை இருப்பதைப் போலவே, இது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது, மேலும் தியானத்தின் மீதான அன்பு மட்டுமே நீங்கள் மற்றவர்களை விட உயர போதுமானதாக இல்லை. பாடசாலைக்குப் பின்னரான டிப்ளோமா தவிர, நீங்கள் தியான ஆசிரியர் பயிற்சியாளர் படிப்புகளைப் பின்பற்றி சான்றிதழ் பெற வேண்டும். தியான ஆசிரியர் சான்றிதழ்களின் வரிசையும் உள்ளன.

திறன்கள்:

பைலேட்ஸ் பயிற்றுவிப்பாளர்: யோகா பயிற்றுவிப்பாளரைப் போலவே, பைலேட்ஸ் பயிற்றுவிப்பாளருக்கும் ஒரு சிறப்பு பயிற்சித் திட்டத்தைப் பின்பற்றி சான்றிதழ் தேவைப்படுகிறது. பைலேட்ஸ் ஆசிரியர்களுக்கான ஒரு பிரபலமான தொழில்முறை அமைப்பாவது, பைலேட்ஸ் முறைக் கூட்டணி (Pilates Method Alliance) ஆகும். இங்கிருந்து நீங்கள் ஒரு சான்றளிக்கப்பட்ட பைலேட்ஸ் ஆசிரியர் (சிபிடி) பதவியைப் பெற வேண்டும்.

திறன்கள்:

உடற்தகுதி பயிற்றுவிப்பாளர்: உடற்தகுதி பயிற்றுவிப்பாளராக அல்லது தனிப்பட்ட பயிற்சியாளராக மாறுவது ஒரு இலாபகரமான வாழ்க்கைப் பாதையாக இருக்கும். தனிப்பட்ட பயிற்சி என்பது ஒரு நெகிழ்வான தொழில் மற்றும் பாடசாலைக்குப் பிறகு சுகாதார அறிவியலில் அடிப்படை டிப்ளோமா முடித்தவுடன் நீங்கள் பெறக்கூடிய ஒன்றாகும். உடற்தகுதி பட்டம் பெறுவது அல்லது தொழில்முறை சான்றிதழ் பெறுவது மிகவும் முக்கியமானதாகும். உங்களிடம் முதலுதவி மற்றும் சிபிஆர் சான்றிதழ் இருக்கிறதா என்று சில நிறுவனங்கள் பரிசீலனை செய்யலாம்.

திறன்கள்:

ஊட்டச்சத்து நிபுணர்: ஊட்டச்சத்து நிபுணராவதற்கு சுகாதார பாடங்களில் சான்றிதழ் அல்லது டிப்ளோமா மட்டும் போதாது. நீங்கள் உடல்நலம், ஊட்டச்சத்து அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் பட்டத்திற்குப் பிறகு, இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற நீங்கள் வதிவிடப் பயிற்சித் திட்டத்தைப் பின்பற்றலாம்.

திறன்கள்:

பணியமர்த்தல் செயல்முறை

மற்ற வேலை வாய்ப்புகளைப் போலவே, இந்த பதவிகளுக்கு ஒருவர் பணியமர்த்தப்படுவதற்கான ஒரு செயல்முறை உள்ளது. இந்த பதவிகளுக்கு கல்வித் தகுதிகள் தேவைப்படுவது மட்டுமல்லாமல், முன்னைய தொழில்கொள்வோரிடமிருந்து நேர்மறையான குறிப்புகள், தொழில்முறை சங்கங்களில் உறுப்பாண்மை, மற்றும் நீங்கள் இன்னும் திறன்களை வளர்த்துக்கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றீர்களா ஆகியன பற்றி அறிந்துகொள்வதில் மனிதவள முகாமையாளர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

சம்பள அளவு

முன்னர் குறிப்பிட்டபடி, இவை திறனை அடிப்படையாகக் பதவிகள் என்பதால், தனிநபர்கள் நன்கு ஊதியம் பெறுவதுடன் தொழில்கொள்வோரால் கவனிக்கப்படுகிறார்கள்.ஆரம்ப சம்பளம் ரூபா .35,000 முதல் ரூபா .100,000 அல்லது அதற்கு மேற்பட்டதாகவிருக்கும்.