அனைவருக்கும் களம் அமைத்துக்கொடுத்தல்

சுற்றுலாத்துறை என்பது எப்போதும் மக்களால் இயக்கப்படும் ஒரு தொழிற்துறையாகும். இது பயணிகளின் ஆசையைத் தூண்டுவதுடன் சுற்றுலாத்தளங்களது இயற்கை, கலாசாரம், அதன் உயிரோட்டம் என்பவற்றை பிரதிபலிக்கும் தயாரிப்புக்களை உருவாக்கவும் சந்தைப்படுத்தவும் சுற்றுலாத்துறையில் இயங்குபவர்களை தூண்டுகிறது.

சுற்றுலாத்துறைஅனைவருக்குமானது. நீங்கள் பல ஹோட்டல்கள் வலையமைப்பை இயக்குபவராக இருப்பினும் சரி, அல்லது பாரம்பரிய சமையல் முறைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு போதிக்கும் ஒருவராக இருப்பினும் சரி. மக்களின் வாழ்வியலை மாற்றிவிடும் ஆற்றல் கொண்ட ஒரு துறையே இது. மட்டுமன்றி, சமூக பொருளாதார விருத்திக்கான வழியமைப்பதுடன், புதிய தொழில்துறைகளையும் உருவாக்குவதால் ஒட்டுமொத்த சமூகங்களுக்கும் சாதகமான தாக்கத்தையும் விளைவிக்கிறது.

உலக அளவில், சுற்றுலாத் துறை சமூகம் முழுவதிலும் உள்ள பெண்கள் மற்றும் பலவீனமான குழுக்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் உட்பட சகல மக்களுக்குமான வாய்ப்புகளை வழங்குகிறது.

80% சதவீதம் வரையான சிறிய தொழில் முனைப்புக்களை (SME) கொண்டமைந்த தொழில்முனைப்புக்களை இயக்குவது இத்துறையாகும். இலங்கையில் மாத்திரம், பல்வேறு இடங்களையும் சேர்ந்த பல்வேறு திறமைகளை தம்மகத்தே கொண்டவர்களுக்கான தொழில்களை சுற்றுலாத்துறை உருவாக்கியுள்ளதுடன் சிறிய தொழில் முனைப்பு (SME) துறையுடன் தொடர்புடைய கணிசமான சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்களது தொழில்முனைப்பு மற்றும் புத்தாக்க எண்ணக்கருக்களுக்கு வலுவூட்டியுமுள்ளது.

உயர்த்துவதற்கும், சமூகங்களை மாற்றுவதற்கும் சுற்றுலாத்துறைக்கிருக்கும் இயல்திறனை நாம் அங்கீகரிக்கும் அளவுக்கு, ஒரு தொழில்துறை என்ற வகையில், அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எமது இத்துறையானது சகலருக்குமான சமவாய்ப்புக்களை வழங்கும் ஒரு தொழில் வழங்குனராக உள்ளதா? இத்துறை சார் தொழில்களை சகலரும் செய்வதற்கு முடியுமான வகையிலான தெளிவானதும் வெளிப்படைத் தன்மை மிக்கதுமான கொள்கைகளையும், நடைமுறைகளையும் நாம் கொண்டுள்ளோமா? பொருத்தமான திறன்களைக் கொண்டவர்களுக்கு உதவுவதற்கான போதுமான கற்பித்தல் மற்றும் பயிற்றுவிப்பு நிகழ்ச்சிகள் இங்கு காணப்படுகிறதா?

சுற்றுலாத்துறையில் பன்முகத்தன்மையும் சகலரையும் உள்ளடக்கிய தன்மையும் சமூகத்தின் பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்கள் மற்றும் விழிம்பு நிலையிலுள்ளவர்களின் வாழ்வியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் சுற்றுலாத்துறை மேலும் நிலைபேறானதும் பொறுப்புமிக்க ஒரு தொழில்துறையாக மாறவும் காரணமாக அமைகிறது. காலப்போக்கில், அனைத்து வகையான சுற்றுலாப் பயணிகளையும் உள்வாங்கக்கூடிய சகலரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை மிக்க ஒரு பயண இலக்காக இலங்கை மாறுவதற்கும் வழிவகுக்கும்.

மாற்றமொன்றைக் கொண்டுவர உங்கள் நிறுவனத்தில் நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை எமக்கு தெரியப்படுத்துங்கள், எங்கள் உரையாடல்களில் பங்குபற்றுங்கள், உங்கைளை எமது செயற்பாடுகளுடன் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். மின்னஞ்ல் மூலம் தொடர்பு கொள்ள – [email protected]

மின்னஞ்ல் மூலம் தொடர்பு கொள்ள Email us at [email protected]

ஆற்றல்களை வளர்த்தல் மற்றும் சுற்றுலாத்துறையில் வாய்ப்புகளை உருவாக்குதல்
ஆற்றல்களை வளர்த்தல் மற்றும் சுற்றுலாத்துறையில் வாய்ப்புகளை உருவாக்குதல் மேலதிக விபரம்