சுற்றுலாத்துறைக் கூட்டணி: கொவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்னர் சுற்றுலாத்துறைக்கு அனுபவம் வாய்ந்த பயணியின் முக்கியத்துவம்

16th ஜூன், 2020 News & Updates

 “அனுபவ பொருளாதாரம் –இலங்கையை எவ்வாறு நிலையான முறையில் மீட்டமைத்தல் மற்றும் தொழில்துறையின் அனைத்து துறைகளுக்கும் பார்வையாளர்களைக் கொண்டு செல்லல்  என்பது தொடர்பான இணையமூலமான புதிய விழிப்புணர்வுக் கருத்தரங்குத் தொடரை இலங்கை சுற்றுலாத்துறை கூட்டணியின் மிகப் பெரியளவில் வெற்றிகரமாக நடாத்தியது. நிபுணர் குழாமானது, அவுஸ்திரேலிய சுற்றுலாத்துறையின் முன்னாள் பிரதித் தலைவர் ண்ட்ரூ பெயார்லி; டுவென்டி31 கன்சல்டிங் நிறுவனத்தின் பங்காளர் லிவர் மார்ட்டின், மற்றும் கைட்சர்ஃபிங் லங்காவின் இணை நிறுவுனர் மற்றும் உரிமையாளர் டில்சிறி வெலிக ஆகியோரை உள்ளடக்கியிருந்தது. தொழில்துறையானது  2020 ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்படுவதால், நவீனகால  சுறங்றுலாப் பயணிகளுக்கான  பிரதான ஊக்குவிப்பாளர்களையும் சுற்றுலா வணிகங்களும் பிரயாண இலக்குகளும் அவர்களின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்பது பற்றிய கலந்துரையாடலானது மிகப்பொருத்தமான சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்டது.

தனது அறிவினைப் பகிர்ந்து கொண்டு, ஒலிவர் மார்ட்டின் இரண்டு வகையான பயணிகளின் உந்துதல் நடத்தை அடிப்படையில் அவர்களின் உந்துதல்களை எடுத்துரைத்தார். பொருள் நுகர்வு மூலம் இயக்கப்படும் பயணிகள் எப்பொழுதும் கூடை நிறைந்ததொரு பொருள் பட்டியலை சரிபார்க்க விரும்புகிறார்கள், ஈபிள் கோபுரம், கிரேட் பெரியர் ரீஃப் அல்லது சிகிரியாக் குன்றுக்கு வருகை தருவதன் மூலம், உணர்ச்சிபூர்வமான  நுகர்வு மூலம் உந்தப்படும் பயணிகள் அனுபவங்களையும் உணர்ச்சி ரீதியான தொடர்பையும் தேடுகிறார்கள். ஆய்வினடிப்படையில், கொவிட்டுக்கு பிந்தைய சூழலில் பொருள் நுகர்வு பயணிகளை விட மிக விரைவில் ஒரு இடத்திற்கு மீண்டும் வருகை தரும்  பயணிகளின் வகைகளும் இவைதான். அனுபவமிக்க பயணிகள் பயணிக்க வேண்டிய உணர்ச்சித் தேவையால் இயக்கப்படுகிறார்கள். அவர்கள் பயண இலக்கு மற்றும் அதன் சமூகத்துடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கட்டியெழுப்பியுள்ளதால்,  அவர்கள் ஒரு பயண இலக்கிற்கு  திரும்புகிறார்கள்.

அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட, நேர்த்தியாக அழகுபடுத்தப்பட்ட அனுபவங்களைத் தேடுவதில்லை, மாறாக உண்மையான, ஊடாடும், உள் அனுபவங்களைத் தேடுகிறார்கள், அவை தங்களை ஒரு பயண  இலக்கில் மூழ்கடித்து அந்த சமூகம் மற்றும் கலாசாரத்துடன் உண்மையிலேயே இணைக்க அனுமதிக்கின்றன. மிகவும் எளிமையான சொற்களில், இந்த பயணிகள் ஒரு குளிரூட்டப்பட்ட சுற்றுலாப் பேருந்தின் வசதியிலிருந்து பார்க்கும் வெளித்தோற்ற இலங்கை அனுபவத்தில் ஆர்வம் குறைவாக உள்ள அதேவேளை, சமூகத்தின் கலாசாரத்தையும் அன்றாட வாழ்க்கையையும் அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு நேரடி அனுபவத்தினால் ஈர்க்கப்படுகிறார்கள்.

அவுஸ்திரேலிய சுற்றுலாத்துறை பற்றிய தனது அனுபவம் தொடர்பாகப் பேசிய அண்ட்ரூ பெயார்லி, சந்தைக்குச் சென்று நுகர்வோருக்கு என்ன வேண்டும், அவர்கள் ஒரு இலக்கை எவ்வாறு உணர்கிறார்கள் என்று கேட்பதன் மூலம் ஆய்வின் கவனத்தை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், உணவு மற்றும் வைனிற்கு  மிகவும் அங்கீகரிக்கப்பட்டதாக உலக அளவில் நான்காவதாக வந்து, உலக தரவரிசைகளை அவுஸ்திரேலியா எவ்வாறு உயர்த்த முடிந்தது என்பதைப் பகிர்ந்துகொண்டு, நுகர்வோருடன் உணர்வுபூர்வமான தொடர்புகளை உருவாக்குவதன் மூலமும், இந்த தூணை மையமாகக் கொண்ட அனுபவங்களை உருவாக்குவதன் மூலமும் அவுஸ்திரேலியா அதன் உணவு மற்றும் வைன் பிரசாதத்திற்கு நன்கு உணரப்பட்ட போதிலும் உலக அரங்கில் குறைந்த தரவரிசையில் இருந்ததாகவும் ஒரு ஆய்வு சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிட்டார்.

தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் போது, டில்சிறி வெலிகல ஆண்டு முழுவதும் பார்வையாளர்களை ஒரு பயண இலக்கிற்கு அழைத்து வருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார், இதனால் வணிகமும் அதைச் சார்ந்திருக்கும் சமூகங்களும் பருவகால வருமானங்களுக்கு மட்டுப்படுத்தப்படாது. அது ஈர்க்கக்கூடிய பயணிகளின் வகைகளை மட்டுப்படுத்துவதனால்,  ஒரு  பயண இலக்கு ஒரு விஷயத்திற்காக மட்டும் அறியப்படக்கூடாது என்றும் அவர் நம்புகிறார். ஒரு வணிகமானது இலக்குகளின் முக்கிய சொத்துக்களைச் சுற்றி பல தயாரிப்புகளை உருவாக்க முடியுமானால், அது பல்வேறுவிதமான பார்வையாளர்களின் தொகுதியொன்றை ஈர்ப்பது மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் விருந்தினர் வருகை காணப்படுவதையும் உறுதி செய்கிறது.

ஒலிவரின் கூற்றுப்படி, அனுபவமுள்ள மற்றும் துணிச்சலான பயணிகள் பயணிக்கும் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினராவர். மேலும், அவர்களே கொவிட்டிற்குப் பிந்தைய சூழலில் பயணிக்க தயாராக இருக்கும் பிரிவினராவர் என்று ஆய்வு காட்டுகிறது. எனவே, இலங்கை செயற்படுத்துநர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரசபைகள் அனுபவச் சந்தையில் உண்மையிலேயே கவனம் செலுத்துவதற்கும் நாட்டின் பயண அனுபவப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் இது ஒரு நல்ல நேரமாகும்.

ஒரு நெருக்கடியின் போது விலைகளை குறைப்பதே முக்கிய உந்துதலாகும். எவ்வாறாயினும், ஒரு நீண்ட கால மூலோபாயமாக, இலங்கையானது, வழங்கப்பட்ட மதிப்பை பிரதிபலிக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், அதன் தயாரிப்பு வழங்கலை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உண்மையான மற்றும் அர்த்தமுள்ள அனுபவங்களுக்காக கூடுதல் செலவு செய்ய விரும்பும் நுகர்வோர் வகையை ஈர்ப்பதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும் என ஒலிவர் வலியுறுத்துகிறார்.

தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கு, அதே பிராந்திய பயணிகளுக்காக போட்டியிடும் பிராந்தியத்திலுள்ள ஏனைய இடங்களிலிருந்து தொழில் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும். எனவே இலங்கை, தொழில்துறைக்கு முக்கியமான சந்தைகளை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளதுடன் தயாரிப்புகள் மற்றும் அனுபவங்கள் அர்த்தமுள்ள மற்றும் உண்மையான இடங்கள் மற்றும் அனுபவங்களைத் தேடும் ஆரம்பகால பயணிகளுடன் உண்மையில் எதிரொலிக்கின்றன என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.